மதர் பவுண்டேசன்

மதர் பவுண்டேசன் ஆரம்பித்ததன் நோக்கம் :

mflogoதாய் என்பவள் எல்லோரிடத்திலும் அன்புடனும், கரிசனத்துடனும் பழகுபவள் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல் பாவித்து துடிப்பவள். ஒரு தாயின் அருமையை அவள் இருக்கின்ற வரை நாம், கண்டு கொள்வதில்லை (அல்லது) தெரிவதில்லை. அவள் இல்லா நிலையில் உணர்கிறோம்.ஒரு அன்னையின் பரிவிலும், அரவணைப்பிலும் மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் அப்படிப்பட்ட பல தாயின் நினைவாக நாம் நமது அறக்கட்டளைக்கு மதர் பவுண்டேசன் என பெயர் வைத்துள்ளோம். அறக்கட்டளையை 07.03.2007 ம் வருடம் ஆரம்பித்து உள்ளோம்.

நமது அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களில் பலர் பலதரப்பட்ட நோய்களால் ஆட்படுகிறார்கள். எந்த நோய் வந்தாலும் அதற்குரிய வடிகாலைத் தேடி அதனை தீர்வு செய்து கொள்கிறோம். ஆனால் நாம் வாழும் உலகில் மனதளவில் பாதிக்கப்பட்ட நபர்களை நாம் புரிந்து கொள்ளாமலும், அவர்களுக்கு தேவையான தீர்வை தேடி தர விழையாமலும், அவர்களை ஏளனம் செய்தும், விமர்சனம் செய்து அவர்களுடைய பாதிக்கப்பட்ட மனதை மேலும், மேலும் புண்ணாக்குகிறோம். அவர்கள் உலகில் வாழ தகுதி அற்றவர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடையே விதைக்கின்றோம். இப்படிப்பட்ட இதயங்களை காப்பதற்கென்றே அறிவியல்பூர்வ சிகிச்சைகள் தருவதற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையே நமது மதர் பவுண்டேசன் ஆகும்.

EC & RC (Emergency Care & Rescue Center) திட்டத்தின் செயல்பாடு குறித்து :

நேசனல் ஹெல்த் மிசன் (NHM) மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் ஆகும். இத்திட்டமானது ரோட்டில் ஆதரவற்று சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களை அழைத்து வந்து பெரியகுளம் G.H- ல் சேர்த்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிஇ தங்கும் வசதிஇ உணவு வசதிஇ பிற வசதிகளும் செய்து கொடுத்து மற்றும் அவர்களுக்கு தொழிற்பயிற்சியும் அளித்து அவர்கள் மனநலம் சரி ஆன பின்னர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இதில் (NGO ஆகிய) மதர் பவுண்டேசன் செய்வது என்னவெனில் ரோட்டில் ஆதரவின்றி சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களை காவல் துறையிடம் FIR போட்டு நீதிமன்றத்தில் (Detention order) ஆணை பெற்று அவர்களை G.H- ல் ஒப்படைப்பது. மற்றும் மனநலம் சரியான பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பது ஆகும்.

EC & RC- ல் உள்ள படி நம் மதர் பவுண்டேசன் (28.08.2018) அன்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற ஒரு பயனாளியை RDO அவர்களின் தகவல் படி, கண்டெடுத்து காவல் அதிகாரி அனுமதியுடன் பெரியகுளத்தில் அவர் மீட்க்கப்பட்டு, 108 அவசர ஊர்தி பெற்று, அதன்மூலம்  நீதித்துறை நடுவர் அவர்களிடம் மீட்பு ஆணை பெற்று பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மேற்படி பயனாளியை அதற்கு என பொறுப்பு வகிக்கும் மருத்துவரிடம் ஒப்படைத்து ஒப்புகை சீட்டு நாம் பெற்று கொண்டோம். இச்செயலை திறன்பட செய்து முடிக்க உதவிய, ஆலோசனை வழங்கிய எல்லோருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோல் மேற்கொண்டு பணியினை நன்முறையில் செய்ய ஒத்துழைப்பு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.  இதன் மூலம் நமது பணியை துவக்கி உள்ளோம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

IMG-20180825-WA0027               IMG-20180829-WA0027                IMG-20180829-WA0025             IMG-20180829-WA0059                     IMG-20180829-WA0021                   IMG-20180829-WA0030IMG-20180829-WA0026 IMG-20180829-WA0023IMG-20180829-WA0031IMG-20180829-WA0007 IMG-20180829-WA0056