எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்:

திரைகடல் ஓடி திரவியம் தேடு – கணியன் பூங்குன்றனார் அவர்களின் கருத்துப்படி தற்போது பலர் வெளிநாடுகள் வெளி ஊர்களில் சென்று வேலை பார்த்து பிழைத்து வருகின்றனர். அம்மாதிரி உள்ளவர்கள் தங்கள் தாய், தந்தையரை கவனிக்க முடியாமல் உள்ளனர். அவர்களை கவனித்து கொள்வதற்கு என்றும்,ஏழ்மையில் தங்கள் குடும்பத்தையே கவனிக்க முடியாமலும், வயதான தங்கள் தாய் தந்தையரையும் கவனிக்க முடியாமல் உள்ள நபர்களின் தாய் தந்தையரை அரவணைப்பதற்கு என்று ஒரு இல்லம் ஆரம்பிப்பது எனவும், மேலும் ஏழ்மையில் வாழும் மக்களை நமது இடத்தில் வைத்து பல மருத்துவ வல்லுனர்களை அழைத்து வந்து அவர்களுக்கு இலவசமாக ஆலோசனையும், மருந்துகளும் தருவதற்கு திட்டம் வகுத்துள்ளோம்.

மேலும் ஆண்டிபட்டியில் வாடகை கட்டிடத்தில் நடத்தி கொண்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், நம் சொந்த இடத்தில் பெரிய அளவில் கட்டி பல நபர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சரி செய்து அவர்களுக்கு தொழில் கற்று கொடுத்து பிறரைப் போல் வாழ வழி செய்து கொடுப்பதற்கு திட்டம் வைத்து உள்ளோம்.

தற்போது  செய்து கொண்டு வரும் நம் கல்வி பயிற்சியானது ஒரு கல்லூரியாக (நர்சிங், மருத்துவம் சார்ந்த) உருவாக்கி பலருக்கு படிப்பும், தொழிலும் கற்று தந்து மக்களின் வாழ்வை சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வைத்து உள்ளோம்.

பதிவு எண் : 745/4.

Donation given are exempt U/S. 80 G (5) Vide CIT (exemption), Chennai Order dated 20-10-2015 in C. No . 464/126/2011-12/CIT – I with effect from 23-04-2015.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் திம்மரச நாயக்கனூரில் பாரத் நிகேதன் பொறியல் கல்லூரிக்கு எதிர்புரம் உள்ள மலை அடிவாரத்தில் எங்கள் மதர் பவுண்டேசனுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் தற்சமயம் 70-80 படுக்கைகள் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவமனை அமைக்க திட்டம் வகுத்துள்ளோம்.

இத்துடன் எங்களது கட்டிடம் அமைய போகின்ற வரைபடம் ஒன்றையும் இணைத்து உள்ளோம். ஏறக்குறைய 6000-7000 சதுர அடியில் பயனாளிகள் (Patients) தங்குவதற்கும் (Rehabilitation) செய்வதற்கு எனவும், மருத்துவர் ஆலோசனை அறை, சமையல் மற்றும் சாப்பாட்டு அறைகள் எனவும் நர்சிங் அறை, கவுன்சிலிங் அறை, பணியாளர்கள் தங்குவதற்கு உரிய அறைகள், முழு வசதியுன் கட்ட திட்டமிட்டு உள்ளோம்.

அதற்குரிய நிதி வசதி நமக்கு தேவைப்படுகின்றது. ஆகவே தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

HOSPITAL FINAL PLAN-page-001