செயல்பாடுகள்

செயல்பாடுகள் :

நமது நிறுவனம் மக்களுக்கு மருத்துவம் சார்ந்த (Health related) உடல் உபாதைகள், மன உபாதைகள் முதலியனவற்றில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்குரிய வழிவகைகளை செய்வதற்கு எனவும், மருத்துவம் சார்ந்த (Health related) துறையில் ஈடுபட்டுள்ளது. ஏனைனில் தற்காலத்தில் மருத்துவம் என்பது எண்ணிப் பார்க்க முடியாத பொருட் செலவில் கொண்டு சென்று விடுகின்றது. ஆகவே நம்மால் இயன்ற உதவியை செயல்படுத்தலாம் என்ற நோக்கில் மருத்துவம் சார்ந்து உள்ள துறையை தெரிவு செய்து உள்ளோம். அதே போல், கல்வி பயிற்சி அளிக்கின்றோம், தொழில் பயிற்சியும் அளிக்கின்றோம். மேலும் ஏழை எளியவர்களுக்கு பள்ளி கட்டணம் கட்ட பொருள் உதவி செய்கிறோம். மனசிதைவு நோய்க்கு இலவச மருத்துவ முகாம், குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்தல், குடி மீட்பு  செய்தல், இலவச பொது மருத்துவ முகாம் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துகின்றோம்.