விருட்சா ஹெல்த்கேர் டிரைனிங் இன்ஸ்ட்டியூட்

விருட்சா ஹெல்த்கேர் டிரைனிங் இன்ஸ்ட்டியூட் ஆரம்பித்ததன் நோக்கம்.

தற்காலத்logoதில் ஆண், பெண் என இருவரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆகையால் நம் அறக்கட்டளை மூலமாக குடும்பத்தில் உள்ள பெண்களும் தங்கள் வீட்டில் இருந்தேயும், வெளி இடங்களில் சென்று சம்பாதித்து கொண்டும் தம் குடும்ப வாழ்வை சுபிட்சமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் சிரமம் கொள்ளாமலும், துன்பம் அடையாமலும் தனக்கென வருவாயை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 12.12.2013 ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது விருட்சா.

விருட்சா என்பதன் பெயர் காரணம்.

ஒரு மரம் தான் உயிரோடு இருக்கும் வரையில் உயிரினங்களுக்கு தேவையானbanner வசதிகள் செய்து தருகின்றது. நமக்கு தேவையில்லாத கரியமில வாயுவை தான் எடுத்து கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனை நமக்கு அளிப்பதும், மழை பொழியச் செய்தும், உயிர் வாழ் இனங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு ஆதாரமாயும் விளங்குகிறது. வெயிலுக்கும், மழைக்கும் குடையாகவும், உலகின் சீதோஷ்ன நிலையை தக்க வைத்து நாம் வாழ உதவி செய்வதுடன், அது தரும் கனி, காய் இலை முதலியன நமக்கு உணவாகவும் அளிக்கின்றன. அது உயிர் இல்லாமல் போனாலும், நமக்கு கட்டைகளாகவும், வீட்டுக்கு தேவையான கதவுகள் நிலைகள், போன்று பல்வேறு பொருட்களாக தந்து நமக்கு உதவுகின்றன. அது போல, இந்த விருட்சமானது எல்லா நிலையிலும் மக்களின் வருவாயை பெருக்குவதற்கும், அவர்களை சிறப்பாக வாழ வழி வகை செய்து கொடுப்பதற்கு என பிறந்ததே நமது விருட்சா ஆகும். அதில் உள்ள படிப்புகள்:

  1. Bed side Assistant
  2. Health care Multi Purpose worker
  3. Assistant Councellor,
  4. Tailoring and Hand Embroidering.

 

 slide4  slide2